MOVIE REVIEW

Iraivi-Review

Cast Crew

Actor : Vijay Sethupathi

Actress : Anjali

Director : Karthik Subbaraj

Producer : C. V. Kumar

Story Writer :

Music Director : Santhosh Narayanan

Cinematography : Sivakumar Vijayan

காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார். இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது. மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது. இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார். இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை. அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் எதார்தமாக​ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படுமளவிற்கு கொடுத்திருக்கிறார். சிவக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக மழை காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.இப்படம் அனைவர் மனதையும் கவரும் என​ எதிர்பார்கப்படுகிறது.

movie review
Posted By
Nihi

Saturday, June 4, 2016

Rating :

Other Movie Reviews

review

 Saturday, June 4, 2016

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப ...

Read More


review

 Saturday, June 4, 2016

அரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை ...

Read More


review

 Saturday, June 4, 2016

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து ...

Read More


Top