பிறந்தநாளை த்ரில்லிங்காக கொண்டாடிய அஞ்சலி !

நடிகை அஞ்சலி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அஞ்சலி அமெரிக்காவிற்கு பறந்துள்ளார். அங்கு அவர் த்ரில்லிங்கான பல விஷயங்களை செய்துள்ளார். பிறந்தநாள் அன்று அவர் ஸ்கை டைவிங் செய்த சில புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. “பறப்பதற்கு தைரியம் இல்லாமல் இறக்கை இருந்து என்ன பயன்” என தன்னுடைய த்ரில்லிங் அனுபவத்தை அஞ்சலி பகிர்ந்துள்ளார்.