மீரா மிதுனிடம் வனிதா – அபிராமி சண்டை!
மூன்றாவது முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி துவங்கியது. 15 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். நேற்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். அவரை ஆடல் பாடலுடன் வரவேற்றனர் சக போட்டியாளர்கள். ஆனால் அவர் உள்ளே வந்தவுடன் சாக்ஷிக்கும், அபிராமிக்கும் முகம் மாறியது. மீரா மிதுனை மற்ற போட்டியாளர்கள் வரவேற்க, சாக்ஷியும், அபிராமியும் தனியே சென்றுவிட்டனர். இருவரும் மீரா மிதுனைப் பற்றிய பழைய கதையை வன்மத்துடன் பேச ஆரம்பித்தனர். அதில், அபிராமி, மீரா மிதுனை தன்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறுகிறார். அபிராமிக்கு ஆதரவாக பேசும் வீட்டின் கேப்டன் வனிதா விஜயகுமார், உங்களுடைய பழைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் எடுத்துவர வேண்டாம் என்கிறார். அமைதியாக இருக்குமாறு மீரா கூற அதிக கோபமாகிறார் வனிதா.