Cine Bits
காதலரை மணக்கிறார் சிம்பு ஹீரோயின்!
தனுஷுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. திடீரென சினிமாவிலிருந்து விலகி சொந்தமாக பிசினஸ் தொடங்கினார். இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்த ஜோ லிக்கல்லோ என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலைப் பற்றி சில மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளி உலகிற்கு தெரிவித்தார். இதையடுத்து ஜோ லிக்கல்லோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்நிலையில் தமிழில் மீண்டும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர் நடிக்க மறுத்து விட்டார். இப்போதுதான் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் விரைவில் காதலரை மணப்பேன் என்றும் ரிச்சா தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக அவர் ஜோவை காதலித்து வருகிறார்.