தி லயன் கிங் படத்தில் மீண்டும் இணைந்த அரவிந்த் சாமி

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது  வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார். இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது என்றார். இம்முறை ஸ்கார் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கிறார் அரவிந்தசாமி. சிம்பாவிற்கு சித்தார்த் குரல் கொடுக்கிறார்.