Cine Bits
கணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!
கணேஷ் வெங்கட்ராமன் ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான நிஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.