Cine Bits
9 ஆண்டுகள் கழித்து மலையாள கரையோரம் சென்ற ஆக்ஷன் கிங் !
மலையாளத்தில் வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜேக் டேனியல் என்ற மலையாள படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் திலீப்புடன் அவர் நடிக்கிறார். வந்தே மாதரம் படம் 2010ல் வெளியானது. 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மலையாளத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை படத்துக்கு பிறகு அவருக்கு வில்லன் வேட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் அவற்றில் சில படங்களை மட்டுமே ஏற்பதாக அர்ஜுனுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.