17 வயது பள்ளி மாணவன் கெட்டப்பில் நடிக்க, உடல் எடையை 17 கிலோ குறைத்தேன் ஜெயம் ரவி !

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு,  கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள கோமாளி படம், வரும் 15ம் தேதி ரிலீசாகிறது. இது குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: இதுவரை குடும்ப கதைகளில் நடித்து வந்த நான், தனி ஒருவன் மற்றும் அடங்க மறு படத்தில் சமூக சிந்தனை கொண்ட கதையில் நடித்தேன். இனி ஒவ்வொரு படத்திலும் சமூக முன்னேற்ற கருத்துகளை வலியுறுத்தி நடிப்பேன். கோமாளி படத்தில் 9 கெட்டப்புகளில் நடித்துள்ளேன். 17 வயது பள்ளி மாணவன் கெட்டப்பில் நடிக்க, உடல் எடையை 17  கிலோ குறைத்தேன். அதற்காக கேரட், தக்காளி மட்டுமே சாப்பிட்டேன். 16  வருடங்கள் கோமாவில் இருந்த ஒருவன், திடீரென்று சுயநினைவுடன் மீண்டெழுந்து நடமாடுகிறான். சமுதாயம் அவனை வித்தியாசமாக பார்க்கிறது. அவனும் இந்த சமுதாயத்தை பழைய நிலையில் இருந்து புதிய நிலையில் பார்க்க முடியாமல் தவிக்கிறான். சென்னை வெள்ள பாதிப்பு மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஹைலைட்டாக இருக்கும்.