சிவா ரஜினி இணையும் படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா!

சூப்பர் ஸ்டார் ரஜினி, முருகதாஸ் கூட்டணியில் தர்பார் படம் முடிவடைந்த நிலையில் சூப்பர்ஸ்டார் தனது அடுத்த படத்தில் இயக்குனர் சிவாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். விஸ்வாசம் படத்தை பார்த்ததன் விளைவாக சிவாவுடன் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிராம பின்னணி அடிப்படையில் உருவாகவுள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா என முடிவாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணையும் முதல் படமாக அமைந்துள்ளது. இத்தகவல் பற்றிய உறுதி தன்மை கூடியவிரைவில் அறிவிக்கப்படவுள்ளது.