Cine Bits
என்னையும் பாலாவையும் பிரித்தது சினிமாதான் – அமீர் !
விஜய்காந்த் மதுரையில் சினிமா ஆசையில் சுற்றிக் கொண்டு இருந்தபோது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவரை ஒரு நட்சத்திரமாக மாற்றியது ராவுத்தர்தான். ஆனால் அவர்கள் இருவரும் கடைசி வரை நண்பர்களாக இருந்தார்களா என்ன?.. அவர்களைப் பிரித்தது எது? இந்த சினிமாதான். அதேப் போல நானும் பாலாவும் ஒன்றாகதான் சென்னைக்கு சினிமா வாய்ப்புத் தேடி வந்தோம். இப்போது நாங்கள் ஒன்றாகவா இருக்கிறோம். அவர் செல்போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. என்னுடையதும் அவரிடம் இருக்காது. எங்கள் நட்பைப் பிரித்தது சினிமாதான் என உருக்கமாகப் பேசினார்.