தயாரிப்பாளரும் சிறந்த கதாசிரியருமான கலைஞானத்திற்கு 1 கோடி மதிப்புள்ள வீடு பரிசு – சூப்பர் ஸ்டார் கொடுத்த வாக்கு !
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கியவர் கலைஞானம்। கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர்। அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்। குறிப்பாக ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்। நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்। அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்। நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ’அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன்। விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு கிடைக்கும்। 10 நாட்களுக்குள் பணத்தை நான் தருகிறேன்’ என்று உறுதி கூறியிருந்தார்। ரஜினி இந்த வீட்டுக்காக 1 கோடி ரூபாய் கூட கொடுக்க தயார் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனதை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார்.