பார்த்திபனின் ஒத்த செருப்பு சாதனை

பார்த்திபன் எழுதி இயக்கி, அவர் மட்டுமே நடித்துள்ள படம், ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படம் ஆசியா மற்றும் இந்தியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  அதற்கான சான்றளிப்பு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி பங்கேற்றனர். ஒருவர் மட்டுமே 2 மணி நேர படம் முழுவதிலும் நடிப்பது பெரிய சாதனை. அதை பார்த்திபன் செய்திருக்கிறார். ஒத்த செருப்பு  படத்தின் மூலம் உலக சினிமாவின் கவனம் தமிழ் சினிமா மீது திரும்பும்.  திரையுலகில் பார்த்திபனுக்கான இடம், இந்த படத்துக்கு பிறகு கிடைக்கும்’  என்றார் பாரதிராஜா.