பக்தி படத்தில் நடிப்பதால் மண்சோறு சாப்பிட்டு பரிகாரம் செய்த புதுமுக நடிகை !
நீண்ட நாட்களுக்குபிறகு சிந்தலக்கரைத் தாயே என்ற பக்தி படம் உருவாகிறது. இதுகுறித்து ஹீரோவாக நடித்து படத்தை தயாரித்து இயக்கும் எம்.பி.செல்வம் கூறும்போது, ‘எட்டயபுரம் பகுதியில் சுயம்பு முறையில் அமைந்துள்ள சிந்தலக்கரை அம்மன் பெருமையை விளக்கும் படமாக இது உருவாகிறது. 42 அடி உயர அம்மன் சிலை அமைத்து பக்தி பாடல் படமாக்கப்பட்டது. சிந்தலக்கரை அம்மன் சைவ முறை. பட ஹீரோயின் அசைவ உணவு சாப் பிட்டுவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் மண்சோறு சாப்பிட்டு பரிகாரம் செய்தார். பிறகு உடல் நலம் அடைந்தார். அதன்பிறகு படம் முடியும் வரை சைவ உணவு மட்டுமே சாப்பிட்டார். ஹீரோயின்களாக அபிநிதா, சித்ரா, ப்ரியா நடிக்கின்றனர். நெல்லை சிவா, கோவை செந்தில் தவசி உள்ளிட்டோர் நடிக்க எழுதி இயக்கி ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிப்பு பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். இசை ஏசிசி தினகர். ஒளிப்பதிவு கணேஷ்ராஜா. படத்துக்கு தணிக்கை குழு யூ சான்று வழங்கியது’ என்றார்.