இயக்குனர் ஜனார்தன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தன்ஷிகா !

சமூக கருத்துகள் நிறைந்த கதைகளை ஜனரஞ்சகமான படமாக கொடுத்து வரும் டைரக்டர்களில், எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். அவர் இயக்கிய ‘இயற்கை,’ ‘ஈ,’ ‘பேராண்மை,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களே இதற்கு உதாரணம். எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்டு செய்யும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்நடிக்கிறார். மேலும் இந்த படத்தில், சாய் தன்சிகா ஒரு ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரம், அது. அதில் நடிப்பது பற்றி சாய் தன்சிகா கூறியதாவது, இந்த படத்தில் என் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. டைரக்டர் ஜனநாதன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்ன கூறியுள்ளார்.