Cine Bits
ரஜினியின் தர்பார் படத்தின் 2வது லுக்
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.