அரசியலுக்கு வந்தால் பாரபட்சம் இல்லாமல் யாரையும் திட்டமுடியாது – சித்தார்த் !
ஊடகங்களின் நடுநிலை, ஃபேக் நியூஸ், தமிழ் சினிமாவின் இன்றைய நிலை, சினிமா வெளியீட்டில் உள்ள பிரச்சனை என பல விஷயங்கள் குறித்துப் பேசி இருக்கிறார் நடிகர் சித்தார்த். நான் ஆக்டிவ் பாலிடிக்ஸுக்கு வரமாட்டேன். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் திட்ட முடியாது. இப்போது தவறு யார் செய்கிறார்கள் என்று பார்க்காமல் தவறு என்ன என்று பார்த்து என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன். என் சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. இப்போது எல்லாம் கத்து கத்து என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர விரும்பவில்லை. கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது. கருத்து கூறினால் பயனாக இருக்குமென்றால் கருத்து கூறலாம். கும்பலாகக் கத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.