Cine Bits
மலையாளத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக கால்பதிக்கும் விஜய் ஆண்டனி !
இசையமைப்பாளராகக் கலக்கி வந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகித் தொடந்து நடித்து வருகிறார். தற்போது படங்களில் பயங்கர பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து தற்போது விபின் எனும் மலையாள இயக்குநர் இயக்கவிருக்கும் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு முன் விஜய் சேதுபதிதான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தமிழில் பல படங்கள், தெலுங்கில் சில படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களுக்காக விஜய் சேதுபதி கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்திலிருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.