காப்பானின் எதிர்மறை விமர்சனங்களுக்கு விக்னேஷ் சிவன் பதிலடி !

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா நடித்த காப்பான் படம் கடந்த  வெள்ளிக்கிழமை  வெளிவந்தது . K.v. ஆனந்த் இயக்கத்தில்  லைக்கா  நிறுவனம்  தயாரித்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சங்கள் வெளிவந்துள்ளன  பாதுகாப்புப்படையின் வீரத்தையும், தியாகத்தையும் விவசாயம் பற்றிய சிந்தனையும் கலந்து அளித்த படமாகும். இந்த விமர்சன கருத்தை பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியிருப்பது, இன்று ஓவ்வொரு ரசிகர்களும் படங்களை ரசிப்பது மட்டுமில்லாமல் விமர்சங்களை பற்றி கூற ஆரம்பித்துவிட்டனர். நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் புதிய முயற்சிகளை பாராட்டாமல் சில விஷமிகள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை காட்டவே நினைக்கின்றனர். சுவாரசியமான திரைக்கதைக்காகவும், பல திருப்புமுனைகளுக்காகவும் இப்படத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். இவ்வுலகில் எதுவுமே சரி இல்லை அப்படியிருக்க ஒரு திரைப்படத்தை மட்டும் எப்படி மிகவும் சரியானதாக இருப்பதற்கு நாம் எதிர்பார்ப்பது. காப்பான் அணைத்து தரப்பையும் திருப்த்தி படுத்தும் படமாக அமைந்துள்ளது. குறிப்பாக குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கும் படமாகவும், படத்தில் இருக்கும் தேசபக்தி படமாகவும் இப்படம் அமைந்துள்ளது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.