நான் தெலுங்கர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை – மீண்டும் சர்ச்சையில் ராதாரவி !

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது.  தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும். தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் தெலுங்கர்களே உள்ளனர். திராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட எனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் மறந்துவிட்டனர் என்றும் தமது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுப்பதாகவும் கூறினார். ராதாரவியின் தமிழர், தெலுங்கர் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறி உள்ளார். ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.