Cine Bits
11 தோற்றங்களில் கலக்கும் யோகிபாபு
பிரபல வசனகர்த்தா புகழ்மணி இயக்கும் படம் காவி ஆவி நடுவுல தேவி’ இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.