சர்வதேச விருதுகளை அள்ளிக்குவிக்கும் ராட்சசன் !

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நார்வேயில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட விருது விழா, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றது. சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDb) 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் படங்கள் வரிசையில் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக 2 தமிழ்ப்படங்கள் இடம்பெற்றன. அதில் ராட்சசனும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசன் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.