ஜிகிர்தண்டா, 96 படத்தை தொடர்ந்து அசுரன் படமும் தெலுங்கில் ரீமேக் !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான படம் அசுரன் 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் சேர்ந்துள்ள இந்த படத்தில் தனுஷின் நடிப்பு பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது. அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்துள்ளது. தனுஷிற்கு விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அசுரன் படம்  தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜிகிர்தாண்டா, 96 படங்களை தொடர்ந்து அசுரன் படமும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.