உலக புகழ் பெற்ற அனிமேஷன் திரைப்படத்தில் DD !

உலக புகழ் பெற்ற அனிமேஷன் திரைப்படமான பிரோஸன் – 2 ம் பாகம் விரைவில் திரையில் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தை வருகிற 22 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் எல்ஸா, அன்னா என்ற இரு சகோதரிகளின் கதாபாத்திரங்கள் தான் மிக முக்கியமானது. இதில் எல்ஸாவுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் குரல் கொடுக்கிறார். அன்னாவுக்கு நடிகையும், சின்னத்திரை  தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி (DD) குரல் கொடுத்துள்ளார். இவர் முதன்முறையாக ஒரு ஹாலிவுட் படத்தில் பணியாற்றுகிறார். பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கான தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் பிரபல கதாபாத்திரமான 'ஓலப்' கதாபாத்திரத்துக்கு காமெடி நடிகர் சத்யன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.