தென்னிந்திய நடிகர்களை சந்தித்த பாலிவுட் நட்சத்திரங்கள் !

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீசிங் அவர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே, ஆலியா பட், ஆயுஷ்மான், மனோஜ் பாய் ஆகியோர் தென்னிந்திய நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, விஜய் தேவர்கொண்டா, பார்வதி ஆகியோரை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களைத்தாண்டி இந்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான நடிப்புக் களத்தை தங்களுக்கே உரிய பாணியில் ஏற்படுத்திக்கொண்டு சாதித்தவர்கள் என வலைதள வாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.