Cine Bits
மீண்டும் சஞ்சய் ஹரிஷ் கல்யாண் கூட்டணி !
ஹரிஷ் கல்யாண் இருந்த சாக்லட் பாய் இமேஜை மாற்ற முடிவு செய்துள்ளார். தனஞ்செயன் தயாரிப்பில் சஞ்சய் பாரதி இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சஞ்சய் இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார், இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து மற்றுமொரு கதையின் ஒன் லைனை தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் சஞ்சய் கூறினார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருவருக்குமே இதில் ஹரிஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினர். ஹரிஷும் ரொமான்ஸ் தவிர மற்ற ஜானரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்படி தான் இந்த படம் தற்போது உருவாகி வருகிறது' என்று கூறியுள்ளார்.