இப்பொழுதும் சிம்ரனுக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் !

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவை தாறுமாறாக தெறிக்கவிட்ட நடிகை சிம்ரன்! அத்தனை ஹீரோக்களுடன் நடித்து, நெடும் காலம் நம்பர் 1 இடத்தில் இருந்தவர். அதன் பின் கல்யாணமாகி, இரண்டு மகன்களை பெற்று செட்டிலாகிவிட்டார். சிம்ரன் தனக்கென ஒரு ஃபேஸ்புக் பேஜ் வைத்திருக்கிறார். மற்ற நடிகைகளைப் போல் அட்மினை வைத்து மேனேஜ் செய்யாமல், தானே இதை நிர்வகிக்கிறார். முக்கிய நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்களுடன் தான் எடுத்த பழைய போட்டோக்களைப் போட்டு, பழைய நினைவலைகளை சொல்லி வாழ்த்துவது சிம்ரனின் வழக்கம். சிம்ரன் ஒரு போஸ்ட்டை போட்டதுமே அடுத்த நொடியில் துவங்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் சில நாட்கள் வரை தொடரும். இன்னும் சிம்ரனுக்கு வெறித்தனமான விசிறிகள் இருக்கிறார்கள். ரெகுலராக தன்னை ஃபாலோ செய்து, மிக டீஸன்டாகவும், ஈர்ப்பாகவும் கமெண்ட்ஸ் செய்யும் நபர்களுக்கு, இன்பாக்ஸில் போய் ’ஹலோ! தேங்க்ஸ்’ சொல்வது சிம்ரனின் வழக்கமாக இருக்கிறது.