Cine Bits
தனுஷுக்கு ஜோடியாகும் கேரளாவின் சிறந்த நடிகை
வடசென்னை படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்த மகிழ்ச்சியில் தனுஷ் மற்றும் அவரின் ரசிகர்கள் வட்டாரம் இருக்கின்றார்கள். அதே வேளையில் அவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மாரி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தனுஷின் படங்களில் மலையாள நடிகைகள் அண்மைகாலமாக நடித்து வருகிறார்கள். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளாராம். ரஜிஷா கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவராம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 02 ல் திருநெல்வேலியில் தொடங்குகிறது.