எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ் !

வாலி, குஷி என தல, தளபதிக்கு இரு வெற்றிப் படங்களை கொடுத்த எஸ்.ஜே. சூர்யா, பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், இந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா ஒரு மேனிக்யூன் பொம்மையை காதலித்தால் என்ன ஆகும் என்பதை அடிப்படையாக வைத்து பொம்மை படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.