Cine Bits
படத்தில் நடிப்பதற்காக எடையை கூட்டவும், குறைக்கவும் தயாராகும் நடிகர்கள் !
படத்தில் நடிப்பதற்காக எடையை கூட்டவும், குறைக்கவும் தயாராகும் நடிகர்கள் !
இயக்குனர் பாலா அர்ஜுன் ரெட்டி ரீமேக் விவகாரத்தால் மனதுடைந்துள்ளார். இதனால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்றவேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.தான் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் ஆர் கே சுரேஷைக் கதாநாயகனாக நடிக்க வைக்க இருக்கிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை 22 கிலோ அதிகமாக்கி முறுக்கேற்றி உள்ளார் ஆர் கே சுரேஷ். மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற படத்தை ரீமேக் செய்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இடையில் ஏற்பட்ட சில தோல்விப் படங்களாளும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவும் சினிமாவில் மாபெரும் சறுக்கலை கண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசாந்த் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் பிரசாந்திற்கு சிறந்த ரீஎன்ட்ரீ படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பல கோடி கொடுத்து வாங்கிய நிலையில் இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் 20 கிலோவை குறைந்துள்ளதாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார். அஜித் நடித்த ‘பில்லா 2 ‘ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன். இந்த படத்தை தொடர்ந்து சூதுகவ்வும், பீசா 2, தெகிடி, ஆரஞ்சுமிட்டாய், என தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே நடித்தார். இதை தொடர்ந்து, தெலுங்கு படத்திலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஐ.வி.சசியின் மகன். அணி சசி இயக்க உள்ளார். இந்த படத்திற்காக அசோக் செல்வன் தன்னுடைய எடையை 100 கிலோவாக அதிகரிக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியுள்ளார். இப்படத்தில் சமையல் கலைஞராக அசோக் செல்வன் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் லண்டனில் துவங்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.