தலைவி படத்தில் உடன்பிறவா சகோதரியாக ப்ரியாமணிக்கு பதிலாக பூர்ணா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் ஹிந்தி உள்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. இதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கண ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி, ஆர்,எம். வீரப்பன் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வேடத்தில் நடிப்பதற்கு நடிகை பிரியா மணியை தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் அவர் தற்சமயம் படத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தெலுங்கில் அசுரன் ரீமேக்கில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் நடிப்பதால் அப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை. அதனால் அவர் விலகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது சசிகலா வேடத்தில் நடிப்பதற்கு நடிகை பூர்ணா நடிக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.தலைவி படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.