Cine Bits
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்

பிரபல நடிகர் பாபிசிம்ஹா. பேட்டை, ஜிகர்தண்டா, நேரம், கருப்பன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அக்னிதேவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்ததாகவும் தன்னிடம் கூறிய கதைப்படி படம் எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் தொடர்ந்து நடிக்கவில்லை. மேலும் நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன். இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.