அக்ஷய்குமாருக்கு பல கெட்டப்

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகராரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எந்திரன் படம் போலவே இந்த படத்திலும் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். புரொபஸர் வசீகரனாகவும், ரோபோ 'சிட்டி'யாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றால், அக்ஷய் குமாருக்கு இப்படத்தில் ஒரு வேடம் தான். ஆனால் படம் முழுக்க பல்வேறு விதமான கெட் அப்களில் வருகிறாராம்! உத்தேசமாக 12 தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.