அசுரன், கைதி படங்கள் வெற்றியடைவது உற்சாகத்தை அளிக்கிறது – அசுரன் வெற்றி விழாவில் தனுஷ் பேச்சு !

அசுரன் 100 வது நாள் வெற்றி விழாவில் கலந்துகொண்டு தனுஷ் பேசினார், அவர் கூறியதில், ஏன் மேல் நம்பிக்கை வைத்து சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததுக்கு இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றி படக்குழுவினர் எல்லாருக்கும் சமம் தான். யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் தாணு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளார். அசுரன் படம் வெளியாகும்பொழுது நான் இங்கு இல்லை. படம் நன்றாக இருக்கிறதென்று எல்லாரும் சொல்கிறார்கள் என்று என் அம்மா தான் போன் பண்ணி சொன்னார்கள். கைதி படமும் வெற்றியடைந்தால் மிகவும் மகிழ்ச்சி. அசுரன், கைதி போன்ற படங்கள் வெற்றியடைவது உற்சாகத்தை அளிக்கிறது என கூறினார் தனுஷ்.