அசுரன் கொடுத்த நம்பிக்கை இடைவெளி இல்லாமல் நடிக்கும் தனுஷ் !

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ. 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் மேலும் அடுத்தடுத்த இரு  படங்களில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் ஐஸ்வர்யா லட்சுமி, பிரிட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வரும் தனுஷ் வரும் நவம்பர் 5ம் தேதியுடன் பணிகளை நிறைவு செய்கிறாராம். அதைத் தொடர்ந்து பட்டாசு படத்தில் நடிக்கிறார். எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் பட்டாசு படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு விவேக் மெர்வின் இசை அமைக்கிறார்கள். வழக்கமாக ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடைவெளி விட்டு நடிக்கும் தனுஷ் தற்போது அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொண்டு இடைவெளிவிடாமல் நடித்து வருகிறார்.