அசுரன் தெலுங்கு ரீமேக்கில் ஷ்ரேயாவிற்கு பதில் அனுஷ்காவா ?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். ஹீரோயினாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இப்படம் வரவேற்பை பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசித்து வந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவை நடிக்க வைக்க எண்ணினர். அதுபற்றி தகவலும் வெளியானது. தற்போது அதில் மாற்றம் செய்ய எண்ணி உள்ளனர். அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் ஏற்று நடித்த வேடம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. அதே உணர்வை திரையில் பிரதிபலிக்க பொருத்தமான நடிகை தேவை. ஸ்ரேயாவால் அவ்வளவு உணர்வுகளை பிரதிபலிப்பது கடினம். ஆனால் அனுஷ்கா அந்த கதாபாத்தித்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று பட தயாரிப்பாளரிடம் தெரிவித்திருக்கிறாம். இதையடுத்து அனுஷ்காவை நடிக்க வைக்க எண்ணி உள்ளனர். இதுகுறித்து அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர்.