அசுரன் பட வெற்றி விழாவில் விஜய் படம் குறித்து சர்ச்சை கருத்து – தர்மசங்கடத்தில் தனுஷ் !

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனை சமீபத்தில் படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறினர். அப்போது மேடையில் இப்படத்தில் நடித்திருந்த நடிகர் பவன் என்பவர் குருவி படத்துக்கு 150 நாள் கொண்டாட்டம் கொண்டாடினாங்க. ஆனால் அந்த படம் 150 நாள் ஓடுச்சானே தெரியல என கிண்டலடித்தார், இதற்கு தனுஷால் கூட சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார். அதன் பின்னர் பேசிய தனுஷ் எது சரியோ அத எடுத்துக்கோங்க, எது சரியில்லையா அதை விட்டுடுங்க என கூறியுள்ளார். இதற்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் கமல் படத்தை சாணியால் அடித்தேன் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். அந்த கருத்து பலராலும் எதிர்க்கப்பட்டு பின்பு அந்த பேச்சுக்கு ராகவா மன்னிப்பும் கேட்டார். இப்பொழுது இந்த பேச்சும் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்கள் சும்மா இருந்தாலும் கூட இருப்பவர்கள் இதைப்போன்று பேசி சர்ச்சையை உண்டாகிவிடுகின்றனர்.