Cine Bits
அசோகமித்ரனின் எழுத்து காலம் கடந்து வாழும் – கமல் இரங்கல்

பிரபல எழுத்தாளரும்,இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோகமித்திரன் வயது 85, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் .சென்னை, வேளச்சேரியில் உள்ள பாபா கார்டன் பகுதியில், அவரது மகன் ரவி வீட்டில் வசித்து வந்த அசோகமித்திரன், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பின், வீடு திரும்பிய அவர், திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அசோகமித்திரனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது… ‛‛திரு.அசோகமித்ரனின் எழுத்து, அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான். நன்றி அமரர் அனந்துவிற்கு'' என்று கூறியுள்ளார்.