அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமுக்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அவரது கதாபாத்திரத்திற்குநல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுராக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.