அஜித்தின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தமிழ் படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் இயக்குனர் வினோத் இயக்குகிறார். யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். அஜீத்தின் 59வது படமான இதன் பூஜை சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது. 

படம் குறித்து போனி கபூர் கூறியதாவது: இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜீத்துடன் இணைந்து பணியாற்றியபோது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டுவரை நல்ல கதை கிடைக்கவில்லை. ஒருநாள் அஜீத் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் விருப்பத்தை தெரிவித்தார். 

அந்த படத்தில் அஜீத் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று மறைவுக்கு முன் ஸ்ரீதேவியும் அதற்கு சம்மதித்தார். அடுத்த வருடம் மே மாதம் 1ம் தேதி படத்தை வெளியிடுகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படமும் அஜித் நடிப்பில் தயாரிக்கிறேன். அது 2019 ஜூலையில் தொடங்கி, 2020 ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும்.