அஜித்தின் துப்பாக்கி சுடும் ஆர்வம்…

நடிகர் அஜித் சினிமாவில் தனி ஆளுமையாக திகழ்பவர். இவர் நடிகர் என்பதை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டு சர்வதேச அளவில் சில கார்  பந்தய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி அதற்கு முறையான பயிற்சி எடுத்து வருகிறார். இதை அடுத்து அவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகிறது.