அஜித்தின் விசுவாசம் பட ஹீரோயின் யார் தெரியுமா?

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி, மீண்டும் சிவா – அஜித் கூட்டணியில் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்று வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது அனுஷ்கா, தமன்னா தானாம், இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், சிவா எப்போதும் ஜோடி புதிதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார், அதற்காக கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.