அஜித்தின் விவேகம் படத்தில் அனிருத் இசையில் சர்வைவா பாடலுக்கு விருது கிடைத்தது – வழங்கியது யார் தெரியுமா?

தல அஜித்தின் விவேகம் படத்தை பற்றி தான் இப்போது ரசிகர்களின் அதிக பேச்சே. போஸ்டர்கள், டீஸர், பாடல் என எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் படக்குழுவும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு பாடலாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிரபல பாடல் நிறுவனமான Sony Music விவேகம் படத்தின் சர்வைவா பாடலுக்கு விருது அளித்துள்ளனர். தற்போது யூடியூபில் இப்பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.