அஜித்தின் விவேகம் படத்தின் கதை என்ன தெரியுமா?

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால், வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களும் அரங்கேறுகின்றன. எதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக 'ரா' தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு ரகசியக் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவர் அஜித். இந்த மிஷனில் அஜித்தும் அவரது குழுவும் எப்படி வெற்றி பெறுகிறார்கள், என்பதுதான் விவேகம் படத்தின் கதை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் கதை நன்றாக தான் இருக்கிறது, ஆனால் இதுதான் விவேகம் பட கதையா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.