அஜித்தின் விவேகம் பற்றி பேசிய பாலிவுட் நடிகர்.

சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் விவேகம். இப்படம் நிறைய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. படத்தை பற்றி ஒவ்வொரு பிரபலங்களும் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில் விவேக் ஓபராய் அண்மையில் படத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய 15 வருட சினிமா பயணத்தில் அஜித்தை போல கடின உழைப்போடு வேலை செய்பவரை நான் பார்த்தது இல்லை. ஹாலிவுட் சினிமாவில் வரும் சண்டை காட்சிகளுக்கு இணையாக விவேகம் படத்தில் இருக்கிறது, ஆனால் பாலிவுட்டில் கூட இல்லை. படப்பிடிப்பின் போது அஜித் அவர்கள் எனக்கு மிகவும் அருமையான காஃபி போட்டு கொடுத்தார். படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் மிகவும் மறக்க முடியாதது என்று கூறியுள்ளார்.