அஜித்தின் வேறொரு பரிமாணம் நேர்கொண்டபார்வையில் – வினோத் !

பொதுவாக பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்? என்பதே கதையின் கரு. கணவராகவே இருந்தாலும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படம், இது. அஜித் ஸ்ரீதேவியிடம் கொடுத்த ஒரு வாக்குறுதிக்காக உருவாகியிருக்கும் படம், இது. ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும்போது, அவருக்காக ஒரு படம் நடித்து தருகிறேன் என்று அஜித் அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், இந்த படத்தில் நடித்துக் கொடுத்து இருக்கிறார். இது, எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை, இந்த படத்தில் பார்க்கலாம். அவருடன் நடிப்பு திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக அமைந்து இருக்கிறது. படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோரும் சொந்த குரலில் பேசியிருக்கிறார்கள். பொதுவாக ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு அஜித் படத்தை பார்ப்பதில்லை. நேர்கொண்ட பார்வையை ‘டப்பிங்’குக்கு முன்பே பார்த்துவிட்டு, என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் இவ்வாறு டைரக்டர் வினோத் கூறினார்.