அஜித்துக்கு வில்லனாக பிரசன்ன நடிக்க வில்லை – அதிகார பூர்வ தகவல் !

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் 60 வது படமாக வலிமை உருவாகிவருகிறது. இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம்சிட்டியில் நடந்து வருகிறது. அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த தகவல்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர். அதையும் மீறி இப்படத்தில் நடிகர் பிரசன்ன அஜித்துக்கு வில்லனாக்க நடிப்பதாக தவறான தகவல் வெளியானது. தவறான இந்த தகவலை தெளிவுபடுத்த பிரசன்ன தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, வலிமை படத்தில் நடிக்க வேண்டி அனைவரும் எனக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு இந்த முறை எனக்கு அமையவில்லை. விரைவில் தல அஜித்துடன் நடிப்பேன், அவருடன் நடிக்கமுடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன் என்று பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.