அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும் : நடிகை நிரோஷா!

பிரபல நடிகை ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷா. இவர் பல படங்களில் நடித்து அப்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை நிரோஷா, சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். அவரிடம் தற்போதுள்ள நடிகர்களில் யார் பிடித்தவர் எனக் கேட்க, அவர் ‘‘தல அஜித் தான், எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் திரை உலகில் கொண்டாடப்படும் நடிகர்கள் முன்னனியில் உள்ளவர் அஜித். அவர் நடித்தாலே போதும், அவர் எப்படியிருந்தாலும் பிடிக்கும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.