Cine Bits
அஜித்தை எப்படியாவது பாலிவுட்டுக்கு அழைத்துவருங்கள் – நடிகை நீத்து சந்திரா போனி கபூருக்குவேண்டுகோள் !

சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் அசத்தியிருக்கிறார் அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன் விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் பிரபல நடிகை நீது சந்திரா, நான் அஜீத் படத்தில் நடிக்கவேண்டும். எப்போதும் எனக்குப் பிடித்த ஆக்ஷன் நடிகர் அவர் தான், அவரை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுங்கள். அவர் இந்திப்படத்தில் நடிப்பதென்பது நமக்குக் கிடைக்கும் வரம் என படத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார் நீது சந்திரா.