அஜித் நடிகராக கிடைத்ததற்கு இந்திய சினிமாவில் பெருமை பட வேண்டும் – டுவிட் செய்த பிரபல நாயகி

சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் விவேகம். இப்படம் மூலம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் செய்யாத பல சாதனைகளை செய்ய களமிறங்க இருக்கிறார் அஜித். தற்போது ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்திற்கு தணிக்கை குழுவினர் UA சான்றிதலும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அஜித்தை போல் ஒரு நடிகர் இருப்பது இந்திய சினிமாவிற்கு பெருமை என்று நடிகை அக்ஷரா கவுடா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.