அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் முக்கிய பிளஸ் என்ன? திணறவைத்த பிரபல இசையமைப்பாளர்!

அஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி கொடுத்தாராம். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று அஜித்திற்கே தெரியவில்லையாம், அந்த அளவிற்கு அனைத்து தீம் மியூஸிக்கும் பட்டையை கிளப்பியதாம். அதில் ஒன்றை கடைசியாக தேர்ந்தெடுக்க அந்த தீம் மியூஸிக் தான் விரைவில் சிங்கிள் ட்ராக்காக வரவிருக்கின்றதாம்.